• Sep 21 2024

மீண்டும் லைகாவுடன் கைகோர்க்கும் சிபி சக்கரவர்த்தி- ஹீரோ யார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ஆம் திகதி வெளியாகியுள்ள திரைப்படம் தான் டான். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகியது.

இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க இப் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத்.அத்தோடு இதில் எஸ்.ஜே. சூர்யா ,சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன் ,குக்வித்கோமாளி சிவாங்கி என பலரும் நடித்து அசத்தி உள்ளார்கள்.

லைக்கா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்கே பிரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தது.

100 கோடி ரூபாயை திரையரங்குகள் மூலமாக மட்டும் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தியின் அடுத்த படத்தையும் லைகா நிறுவனமே முடிவு செய்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதுவரை படத்தின் ஹீரோ யார் என்பதை முடிவு செய்யவில்லை. டான் இமாலய வெற்றியால் மீண்டும் சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement