கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை அமலா பால் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிலையில், இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஆடை படத்திற்கு பிறகு ஏற்பட்ட சர்ச்சை மற்றும் ஏ.எல். விஜய் உடனான விவாகரத்துக்கு பிறகு நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் இருந்து ரொம்பவே ஒதுங்கி சென்று விட்டார்.
1991ம் ஆண்டு நடிகை அமலா பால் கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் பிறந்தார். மாடலிங்கில் இருந்த ஆர்வம் அவரை அப்படியே 2009ல் நீல தாமரா படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அமலா பால் அறிமுகமானாலும், அவருக்கு மைனா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது முன்னணி நடிகை அந்தஸ்த்தை அளித்தது.
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தெய்வத் திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்த அமலா பால் கடந்த 2014ம் ஆண்டு ஏ.எல். விஜய்யை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், திருமண வாழ்க்கை இவருக்கு பெரிதாக செட் ஆகாத நிலையில், 2017ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார்.
சினிமா ஷூட்டிங் இல்லாத நேரங்களில் வெளிநாடுகளுக்கு ஓய்வெடுக்க கிளம்பி விடும் அமலா பால் அங்கே எடுத்துக் கொள்ளும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்ந்து டச்சில் உள்ளார். தமிழில் இப்போதைக்கு அமலா பால் நடிக்க மாட்டார் என்றே தெரிகிறது.
நடிகை அமலா பால் அடுத்து பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். மேலும், மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்துக்கு சுமார் 2 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் அமலா பால் 32 வயதில் 32 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!