• Sep 20 2024

மாமன்னன் பட இசை வெளியீட்டு விழாவில் குவிந்த பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாமன்னன் திரைப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது. உதயநிதி நடித்துள்ள கடைசிப் படமாக உருவாகியுள்ளதால் மாமன்னன் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் உதயநிதியுடன் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயன்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மாமன்னன் படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்ட நிலையில், இன்று இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தப் படத்தில் இருந்து 7 பாடல்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு பாடலையும்  ரசிகர்களுக்கு மியூசிக்கல் ட்ரீட் கொடுத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். ஏற்கனவே வடிவேலு பாடிய ராசக்கண்ணு, ஏஆர் ரஹ்மான் குரலில் ஜிகுஜிகு ரயில் பாடல்கள் வெளியாகிவிட்டன. இந்தப் பாடல்கள் தவிர 'கொடி பறக்குற காலம்', 'நெஞ்சமே நெஞ்சமே', 'உச்சந்தல', 'மன்னா மாமன்னா', 'வீரனே' ஆகிய பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மாமன்னன் தான் உதயநிதியின் கடைசிப் படம் என்பதால், ஏராளமான திரை பிரபலங்கள் நேரு ஸ்டேடியத்தில் குவிந்துள்ளனர். ஆர்ஜே விஜய், டிடி இருவரும் தொகுத்து வழங்கும் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கமல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். மேலும் உதயநிதியின் அம்மா துர்கா ஸ்டாலின், உதயநிதியின் மனைவி கிருத்திகா இருவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அதேபோல், தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், பாண்டிராஜ், ஏஆர் முருகதாஸ், பா ரஞ்சித், ஹெச் வினோத், விக்னேஷ் சிவன், எஸ்ஜே சூர்யா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், கவின், விஜய் ஆண்டனி, சூரி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அனைவரும் மாரிசெல்வராஜ், உதயநிதி உட்பட படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement