• Nov 10 2024

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துத் தெரிவித்த பிரபலங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்த கொண்டனர். மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தான் இவர்களது திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்தத் திருமணம் இந்து சமயப் பாரம்பரியத்தின் படி நடைபெற்றதோடு திருமண விழாவிற்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதையடுத்து பல திரையுலகப் பிரபலங்கள் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

திருமணம் முடிந்துள்ள நிலையில் மணமக்கள் இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தரப்பினர் வெளியிட்டனர். மணக்கோலத்தில் மகிழ்ச்சியோடு இருக்கும் தம்பதிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெற்றன.

ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆரி, பிரியா அட்லி உள்ளிட்ட போன்ற திரைபிரபலங்களும் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். இதனால் சமூகவலைதளங்கள் நேற்று நயன்தாரா விக்னேஷ் திருமணப் புகைப்படங்களால் ஆக்கிரமிக்கப்பட்டன என்று கூறலாம்.

மேலும் இன்றைய தினம் தம்பதியினர் இருவரும் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய கிளம்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement