மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய திறமை மூலம் மட்டுமே பின்னணி பாடகியாக மாறியவர் ரமணியம்மாள். 1954 ஆம் ஆண்டு சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில் பிறந்த இவருக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆனது. பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக, தன்னுடைய பாட்டு திறமையை கோவில் திருவிழா, மற்றும் மேடைகளில் வெளிப்படுத்தி வந்த ரமணியம்மாள், பல வருடங்கள் தன்னுடைய பிள்ளைகளை காப்பாற்ற, வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றியவர்.
இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டும், ரமணியம்மாளுக்கு காதல் படத்தில் இடம்பெற்ற நாட்டுப்புற பாடலான, 'தண்டட்டி கருப்பாயி' பாடலில் கோரஸ் பாடும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அடுத்தடுத்து... காத்தவராயன், தெனாவட்டு, ஹரிதாஸ் போன்ற படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தாலும் இவருக்கான அங்கீகாரம் என்பது கிடைக்கவில்லை.
பின்னர் ரமணியம்மாள், கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சரிகமப',ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். 63 வயதில்.. ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட பழைய பாடல்கள், மற்றும் நாட்டுப்புற பாடல்களை பாடிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், அடுத்தடுத்து பல படங்களில் பின்னணி பாடகியாக மாறினார்.
இந்த நிலையில் இன்றைய தினம் உடல் நலக்குறைவு காரணமாக இறப்புக்குள்ளாகினார். அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. இதனால் சரிகமப ஜுரியல் இருக்கும் பிரபலங்களும் தொகுப்பாளினி அர்ச்சனாவும் நேராக சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதிலும் அர்ச்சனா தன்னுடைய குழந்தை இப்படி இருக்கு என்று கதறி அழுதுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!