இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் அமைந்துள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கி தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதில் MBA முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர், அக்கல்லூரி விடுதியில் உள்ள பாத்ரூமில் ரகசியமாக கேமரா ஒன்றினை வைத்து, அங்கு குளிக்கும் கல்லூரிப் பெண்களை வீடியோ பதிவு செய்து அதனை தன்னுடைய காதலனுக்கு அனுப்பி வந்துள்ளார்.
இந்த சம்பவமானது பல நாட்களாக அரங்கேறி வந்துள்ளது. குறித்த மாணவி இதுவரை 60 இற்கும் அதிகமான பெண்களின் குளியல் வீடியோவை படமாக்கி அதனை தனது காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த வீடியோக்கள் ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் லீக் ஆனதை பார்த்து சம்பந்தப்பட்ட மாணவிகள் உட்படப் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
இத்தகைய கேவலமான செயலில் ஈடுபட்ட அந்த மாணவி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதியில் போராட்டமும் வெடித்துள்ளது. இதனால் சண்டிகரில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாது குளியல் வீடியோ பரவியதை அறிந்த சில மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த சம்பவமானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த மாணவியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல பிரபலங்களும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் வீடியோக்களை காதலனுக்கு அனுப்பிய அந்த மாணவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் இந்த விவகாரம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.
அதாவது “சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. நாம் தற்போது நம் சகோதரிகளுக்கு துணையாக நிற்க வேண்டிய நேரம் இது, அப்படி செய்தால் தான் சிறந்த முன்னுதாரணமாக இருக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் இது சோதனையான ஒரு காலம் தான். பொறுப்புடன் இருங்கள்" என அப்பதிவின் ஊடாக வேண்டுகோள் ஒன்றினையும் விடுத்துள்ளார்.
Listen News!