இன்றைய காலத்தில் பல சூதாட்ட விளையாட்டுகள் ஆன்லைனில் விளையாட கூடியதாக இருக்கிறது. இதனால் பல குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறான விளையாட்டிற்கு விளம்பரம் கூட எடுக்கப்படுகிறது.
ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுக்களை இப்போது ஆன்லைனிலும் விளையாடுகிறார்கள். அப்படி பட்ட சூதாட்ட விளையாட்டிற்கு ஆதரவு கொடுக்கும் வகையாக பிரபல நடிகர் சரத்குமார் விளம்பரம் செய்வது சரியா?
இது தவறு என்று பலர் சொன்னாலும் இதை சரத்குமாரிடமே கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். "நீங்கள் இப்படி பட்ட விளையாட்டுகளை முற்றாக ஒழித்தால் நான் ஏன் நடிக்கப்போறேன்" என்று கேட்டிருந்தார்.
இருந்தாலும் சமூகத்திற்கு தீங்கு தரக்கூடிய விளையாட்டிற்கு இப்படி பட்ட பிரபலம் ஆதரவாக நடித்திருக்க கூடாது. இவர் தெரிந்தே நடித்தது தவறு தான்.
இது போதைப்பொருள் விற்று பிடிபட்ட ஒருவன் போதை தரக்கூடிய கன்றை நாட்டாமல் விட்டால் நான் போதைப்பொருளை விற்கமாட்டேன் என்று சொல்லுவது போல் இருக்கிறது இவரின் பதில். இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!