• Sep 19 2024

'நட்சத்திரம் நகர்கிறது' படம் பற்றிய பிரபலங்களின் விமர்சனம்... அப்படி என்னதான் சொல்லுறாங்க..? படம் நல்லா இருக்கா இல்லையா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படமே நட்சத்திரம் நகர்கிறது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷார விஜயன் உட்படப் பலரும் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்தின் அனைத்துக் கட்டப் பணிகளும் நிறைவடைந்த நிலையில் நாளை வெளியாக இருக்கின்றது.


இந்த நிலையில் இப்படத்திற்கான பிரிமியர் காட்சி ஆனது சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நேற்று அதிகாலை திரையிடப்பட்டது. இதில் படக் குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதிலும் குறிப்பாக நடிகர் ஆர்யா, ஜெய் பீம் மணிகண்டன், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் ஜெயராம், ஹரி கிருஷ்ணன், பால சரவணன், இயக்குநர் சசி ஆகியோர் கலந்து கொண்டு படத்தை பார்த்து ரசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காதல், அரசியல் மற்றும் பல விஷயங்களை பற்றி பேசும் இப்படத்தின் மீது ரசிகர்கள் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிய நாளிலிருந்தே அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் இப்படத்தின் பிரிமியர் ஷோவில் கலந்து கொண்ட திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் சினிமா பிரமுகர்கள் படத்தை பார்த்த பின் தங்களுடைய முதல் விமர்சனத்தையும் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் அனைவரும் ஏறக்குறைய ஒன்றாக கூறிய விமர்சனம் என்னவெனில் " படம் நன்றாக இருக்கிறது. கதைக்களமும், திரைக்கதையும் அருமையாக உள்ளது. இதுவரை பா. ரஞ்சித் இயக்கியதில் உருவான படங்களில் இதுவே சிறந்த திரைப்படம். நடிகை துஷாரா விஜயன் படத்தை முழுமையாக தாங்கி நிற்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் அனைவரின் நடிப்பும் சூப்பர் " என்று பாராட்டிக் கூறியுள்ளனர்.


இவர்கள் அனைவரும் இப்படத்தை பற்றிக் கூறிய கருத்துக்கள் ஆனவை தற்போது இணையத்தில் வைரலாகப் பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement