• Sep 20 2024

பிக்பாஸ் வீட்டில் கல்யாணம் பண்ணனும் என புலம்பிய பிரபலம்...ஆயிஷா சொன்ன சூப்பர் பதில்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சிகளில் மக்கள் மத்தியில் அதிகம் பேமஸ் ஆன ரியாலிட்டு  நிகழ்ச்சி  என்றால் அது பிக்பாஸ் தான். இந்நிகழ்ச்சிக்கு கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக வருடந்தோறும் தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறுஇருக்கையில் தமிழில் இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 6-வது சீசன் நடைபெற்று வருகிறது.மேலும்  இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகிய  பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரை சாந்தி, அசல் கோளார், ஷெரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி ஆகிய 5 பேர் எலிமினேட் ஆகி  பிக்பாஸ் வீட்டை விட்டு சென்று விட்டார்.இதுதவிர ஜிபி முத்து இரண்டாவது வாரத்திலேயே வெளியேறிவிட்டார்.எனினும்  தற்போது 15 போட்டியாளர்களுடன் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சி 7 வாரங்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.



இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் 44வது நாளில் ராம் ராமசாமி பேசியுள்ள விஷயங்கள் வைரலாகி வருகின்றன. இதில் எபிசோடு தொடங்கியவுடனேயே ராம் ராமசாமி, “அண்ணனுக்கு வயசாயிடுச்சு மா... பொண்ணு இருந்தா பாரு.. 28 வயசு ஆகுது.. முடி நரைக்க ஆரம்பிச்சிடுச்சு. கல்யாணம் பண்ணி செட்டில் ஆகணும்’ என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

மேலும் இதை கேட்ட ஆயிஷா ராம் குறித்து ராமை முன்னாடி வைத்துக்கொண்டு கதிரவன் & விக்ரமனிடம் பேசுகிறார். 



அதில், “ராமிடம் நான் இதுபற்றி கேட்டேன்.. 28 வயசுலயே கல்யாணமாங்க அண்ணா? 2 வருஷம் போகட்டும் பொறு.. உங்களலாம் புடிச்சுட்டு வந்து யங்ஸ்டர் கண்டண்ட் கொடுப்பாங்கனு சொல்லி பிக்பாஸ்ல எடுத்து வெச்சா.. வொர்த்தே இல்லனு சொன்னேன்.. ஆனால் அவரோ நான் பேச வேண்டிய இடத்துல பேசுவேன்.. என்ன பத்தி தெரியாமலயே உள்ள அனுப்பிருக்காங்கனு கேக்குறார். ஆனால் நான் கேட்டேன் இங்க எங்கடா நீ பேசுற? என கேட்டேன்” என சிரித்துக்கொண்டே ராமை ஜாலியாக வறுத்தெடுத்தார்.

Advertisement

Advertisement