திரையுலகில் ஒரு சில படங்கள் நடித்ததன் மூலம் ரசிகர்களிடத்தே தனக்கென ஒரு இடத்தை படித்தவர் தான் டிகை ராதிகா ஆப்டே.இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
மேலும் அவர் ஹிந்தி சினிமாவில் போல்டான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.
விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் உட்பட பல படங்களை தற்போது தன் கைவசம் வைத்திருக்கிறார் ராதிகா ஆப்டே. இந்நிலையில் தற்போது ராதிகா அளித்திருக்கும் ஒரு பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் ஒரு பெரிய பிரபலம் தன்னை படத்தில் நடிக்க வைக்க முடியாது என ஓப்பனாக கூறியதாகவும், அதற்கான காரணம் தான் தனக்கு ஷாக் கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.
இன்னொரு நடிகைக்கு உதடுகள் பெரிதாக இருக்கிறது, மார்பகம் பெரிதாக இருக்கிறது, அதனால் அவரை நடிக்க வைத்தால் படம் அதிகம் வியாபாரம் ஆகும்' என காரணம் சொல்லி ராதிகாவை வேண்டாமென கூறினார்களாம்.
சினிமா துறை இந்த நிலையில் தான் இருக்கிறது என சமீபத்தில் நடந்த இந்த விஷயம் பற்றி வருத்தமாக பேசி இருக்கிறார் ராதிகா ஆப்டே.
Listen News!