• Nov 19 2024

குடும்பத்துடன் சென்று மீனாவை சந்தித்த பிரபலங்கள்... துயரத்திலிருந்து மீண்டெழுந்து விட்டாரா...?வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தனது நடிப்புத் திறமையினால் கதாநாயகியாக வளர்ந்தவர் நடிகை மீனா. அந்தவகையில் இவரின் முதல் திரைப்படமானது சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியான 'நெஞ்சங்கள் மறப்பதில்லை' என்ற படமே. பின்னர் கதாநாயகியாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் தமிழில் மட்டுமன்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு எனப்பல மொழிகளிலும் நடித்திருக்கின்றார். மேலும் இவர் 'அரிச்சந்திரா, அண்ணாத்த, மாயி, கூலி, அன்புடன், எஜமான்' எனப் பல படங்களிலும் நடித்திருக்கின்றார். அதுமட்டுமன்றி கலைமாமணி விருது, தமிழக அரசு திரைப்பட விருது எனப் பல விருதுகளையும் வென்றிருக்கின்றார்.

இவ்வாறாக பல படங்களிலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வந்த மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவருக்கு நைனிகா எனற மகளும் இருக்கிறார். இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த மாதம் 28-ஆம் திகதி காலமான சம்பவம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்துயரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்து வருகின்ற மீனா நீண்ட நாட்களின் பின்னர் தற்போது தனது தோழிகளான ரம்பா, சங்கவியுடன் இணைந்து புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.

இப்புகைப்படங்களானவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் இப்பதிவில் மீனா தனது தோழிகளான ரம்பா, சங்கவி, சங்கீதா ஆகியோர் தங்களுடைய குடும்பத்துடன் வந்து சந்தித்திருந்தமை மகிழ்ச்சியாக உள்ளது எனவும் பதிவிட்டிருக்கின்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement