• Sep 20 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க மறுத்த பிரபலங்கள்- அட இவரெல்லாம் கமிட்டானாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரமாண்ட இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.ப்படத்தில் ஆதித்ய கரிகாலன் ரோலில் விக்ரம், வந்தியத்தேவன் ரோலில் கார்த்தி,நந்தினி ரோலில் ஐஸ்வர்யா ராய், குந்தவை ரோலில் த்ரிஷா, அருள்மொழி வர்மன் ரோலில் ஜெயம் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

கல்கியின் பிரமாண்ட வரலாற்றுக் கதையை இப்படம் கூறி நிற்கின்றது. இப்படத்தின் முதல் பாகமானது செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பான் இந்தியா படமாக 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படவுள்ள நிலையில் கடந்த 8ம் திகதி இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசர் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அந்த வகையில் இப்படம் குறித்த ஒரு சுவாரஸியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடிக்க சூர்யாவும் ஒப்பந்தமாகியுள்ளார்.ஆனால் இப்படம் தொடங்க தாமதமானதால் தேதி பிரச்சனை காரணமாக அவர் இப்படத்தை நிராகரித்துள்ளார்.

அதே போல கீர்த்தி சுரேஷ், சத்யராஜ் உள்ளிட்டோர் தேதி பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து விலகியுள்ளனர். மேலும் நடிகை அனுஷ்காவை அணுகியபோது அவர் இப்படத்தின் வாய்ப்பை நிராகரித்தாக சொல்லப்படுகிறதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement