தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார் கூடுதல் பலம்.
960களில் போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்குகிறார். இதனை ஸ்வப்னா சினிமா எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
மிருணாள் தாகூர், ரஷ்மிகா மந்தானா, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருப்பதால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'சீதா ராமம்' திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று வெளியாகிறது.
இந்நிலையில் இந்திய அரசின் சென்சார் போர்டு 'சீதா ராமம்' படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக துல்கர் சல்மானின் பிறந்தநாள் வாழ்த்துகள் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- சரவணன் அருள் நடித்த தி லெஜெண்ட் படத்தின் திரைவிமர்சனம்
- அந்த கேள்வி கேட்ட நபர்- நச் என பதிலளித்த சீரியல் நடிகை நந்தினி..!
- தனுஷை கட்டியணைத்து புகைப்படம் வெளியிட்ட அறந்தாங்கி நிஷா…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!