தமிழ் சினிமாவில் வெளியாகில சில திரைப்படங்கள் இன்னும் மக்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கின்றன. இதனடிப்படையில் பேய்ப்படமாக எடுக்கப்பட்டு பார்ப்பவருக்கு ஓர் பீதியைக் கிளப்பும் திரைப்படம் தான் சந்திரமுகி.
இந்தத்திரைப்படத்தை இயக்குநர் வாசு இயக்கியிருந்ததோடு ரஜினிகாந்த்,நயன்தாரா,ஜோதிகா, பிரபு நாசர், வடிவேலு எனப் பல முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இந்தத் திரைப்படம் 700 நாட்களுக்கு மேல் ஓடி திரை உலகில் சாதனை படைத்தது . இந்நிலையில் சந்திரமுகி 2வது பாகத்தினை ரஜினிகாந்தின் அனுமதியுடன் ராகவா லாரன்ஸ் இயக்கி நாயகனாக நடிக்கிறார்.முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனமானது இத்திரைப்படத்தினை தயாரிக்க இருந்தபோதிலும் இப்பொழுது லைக்கா நிறுவனமானது இப்படத்தினை தயாரிக்க உள்ளது .
இத்திரைப்படத்திற்கு பாகுபலி இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்க உள்ளளார். அதேவேளை முன்னணி நகைச்சுவை நடிகராக காணப்படுகின்ற வடிவேலுவையும் இப்படத்தில் நடிக்க வைக்க பட குழுவானது முயற்சிக்கின்றது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்
- கவர்ச்சியில் எல்லை மீறும் தோனி பட நடிகை திஷா பதானி -குவியும் லைக்குகள்
- உண்மைச் சம்பவத்தைக் கூறும் ஏ.கே 61 திரைப்படம்-சூப்பர் அப்டேட்டாக இருக்கே
- விக்ரம் படத்தால் பின் தள்ளப்படும் யானை திரைப்படம்- தெலுங்கில் என்ன பெயரில் வெளியாகவுள்ளது தெரியுமா?
- இசையமைப்பாளர் ஜு.வி பிரகாஷின் பிறந்தநாள்- வெளியாகியது புதிய படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!