• Nov 19 2024

நிலவில் தரையிறங்கிய சந்திராயன் 3 - வரலாறு படைத்த இந்தியாவைப் பாராட்டி வரும் பிரபலங்கள்- யார் யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது. 

மேலும், சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி நிலவில் தரையிறங்கும் என்றும், நிலவை அடைய 40 நாள்கள் ஆகும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதே போல இன்றைய தினம்  சந்திரயான் 3 தற்பொழுது சந்திரனின் தென்துருவப் பகுதியில் இறங்கியுள்ளது.


இதன்மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் தரையிறக்கத்தை மேற்கொண்ட 4 ஆவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா தன் சாதனையைப் பதிவு செய்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வாழ்த்துத் தெரிவித்த பிரபலங்கள் பின்வருமாறு












Advertisement

Advertisement