• Sep 21 2024

இரவின் நிழல் ரிலீஸ் திகதியில் ஏற்பட்ட மாற்றம்-புதிய அப்டேட்டை வெளியிட்ட நடிகர் பார்த்தீபன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

புதிய பாதை என்ற திரைப்படத்தில் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானவர் தான் நடிகர் பார்த்தீபன். இந்த முதல் படத்திலேயே சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கு தேசிய விருதையும் பெற்றார். வித்தியாசமான கதைக்களங்களோடு திரைப்படம் எடுப்பதில் நடிகர் பார்த்தீபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் ஒரு நடிகரை வைத்து மட்டும் எடுக்கப்பட்ட படமாக அமைந்தது.

இதையடுத்து அவர் இயக்கத்தில் இரவின் நிழல் திரைப்படத்தை எடுத்துள்ளார்.இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள முதல் லீனியர் திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படக்குழுவினரை சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த் வாழ்த்தியுள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ஆரம்பத்திலிருந்தே வித்தியாசமான முறையில் பிரமோஷன்களை செய்து வந்தார் பார்த்தீபன்.

கலைப்புலி எஸ்.தாணு படத்தை வெளியிடுகிறார். ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை. இரவின் நிழல் திரைப்படம் ரிலீஸூக்கு முன்பே ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளன. இப்போது இரவின் நிழல் திரைப்படம் ஜூலை 24-இல் ரிலீஸ் ஆகும் என புதிய அப்டேட்டை நடிகரும் படத்தின் இயக்குநருமான பார்த்தீபன் வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement