• Sep 20 2024

சார்லி சாப்ளின் மகள் உடல்நலக்குறைவால் திடீர் மரணம் - சோகத்தில் திரையுலகம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

உலக மக்களை இன்றும் தனது இணையற்ற நகைச்சுவை படங்கள் மூலம் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் சார்லி சாப்ளினின் மகள் ஜோசப்பைன் சாப்ளின் காலமானார். 

அவருக்கு வயது 74. ஹிட்லர் போல சின்ன மீசையை வைத்துக் கொண்டு தலையில் தொப்பி போட்டுக் கொண்டு கையில் ஒரு தடியுடன் அப்பாவி முகத்துடன் எட்டிப் பார்க்கும் அந்த சார்லி சாப்ளின் உருவமே ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி விடும்.

மாடர்ன் டைம்ஸ், சிட்டி லைட்ஸ், தி கிட், தி கிரேட் டிக்டேட்டர் என பல படங்களில் நடித்து காமெடி மூலமாக புரட்சி கருத்துக்களையும் முன் வைக்க முடியும் என அப்போதே ஹீரோவாகவும் இயக்குநராகவும் பல படங்களை உருவாக்கி அசத்திய சார்லி சாப்ளினுக்கு மொத்தம் 8 குழந்தைகள் பிறந்தனர்.

நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் மொத்தம் 4 மனைவிகளை திருமணம் செய்துக் கொண்டார். அதில், அவர் முதன்முறையாக 1943ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டவர் ஊனா ஓ நெயில். சார்லி சாப்ளினுக்கும் ஊனாவுக்கும் மகளாக பிறந்த ஜோசப்பைன் சாப்ளின் தான் தற்போது காலமானார்.

74 வயதான ஜோசப்பைன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக குடும்பத்தினர் தகவல் அளித்துள்ளனர். அவரது மறைவு செய்தி அறிந்த சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.








Advertisement

Advertisement