• Sep 20 2024

Mike -அ வைக்க வேண்டிய அவசியமே இல்ல.. ஆனா தவெக தலைவரின் 'Code வேர்ட்' இது தான்! சாட்டை துரைமுருகன் பிரச்சாரம்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தற்போது தனது 68 வது படமான ' தி கோட்' படத்தை, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாட்டு நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தது. 

குறித்த பாடல் யுவன் இசையில், மதன் கார்க்கி வரிகளில் விஜய் குரலில் பாடப்பட்டு வெளியாகியிருந்தது. இந்த பாடல் முழுக்க முழுக்க விஜயின் அரசியல் வருகையை பற்றி கூறுவதாகவே காணப்படுகிறது.

மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு தான் இதுவரையில் தயாரித்த படங்களான சென்னை 28, மங்காத்தா, மாநாடு, மாஸ், பிரியாணி போன்ற படங்களின் ரெஃபரன்ஸ்களை வைத்து தான் கோட் படத்தின் பாடலை அமைத்திருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.


இந்த நிலையில், தமிழ் புத்தாண்டையொட்டி நேற்றைய தினம் வெளியான கோட் படத்தின் விசில் போடு என்ற பாடல், நாம் தமிழர் கட்சிக்கு மறைமுக ஆதரவை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளதாக அந்தக் கட்சியின் நிர்வாகி சாட்டை துறைமுகம் புது விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.


அதாவது திருச்சியில் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாம் தமிழர் கட்சிக்கு மறைமுக ஆதரவை கொடுத்துள்ளார். அவர் நடித்த கோட் படத்தின் பாடல் நேற்று வெளியானது. அதில் வந்து கம்பைன் தொடங்கி மைக்க புடி என்ற பாடல் வரிகள் இடம் பெற்றது. அந்தக் காட்சியில் மைக்கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் மைக் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற மறைமுக ஆதரவு தருவதாக கருதுகிறோம். அவர் நேரடியாக ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும் மைக்கை வைத்தால் அது நாம் தமிழர் கட்சியை தான் சென்றடையும் என விஜய்க்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தவெக கட்சியில் எவ்விதமான பதிலும் உறுதியும் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement