• Sep 20 2024

என்னுடைய வேகத்தை சரி பார்த்துக் கொள் பொண்டாட்டி" -புது மனைவியிடம் கொஞ்சி குலாவும் ரவீந்தர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில்,முருங்கைக்காய் சிப்ஸ் நட்புன்னா என்னன்னு தெரியுமா,போன்ற படங்களைத் தயாரித்து பிரபல்யமானவர் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.இவர் Fatman என்ற அடையாளத்தின் மூலம்  மக்கள் மத்தியிலும் அதிகம் பிரபலம் அடைந்தார்

இந்த நிலையில் இவர் பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமியை இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ளார்.இது தொடர்பான புகைப்படங்களை ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் தங்களின் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில், ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் வைரலாகி இருந்தது.


மேலும் மகாலட்சுமி பல சீரியல்களில் நடித்திருப்பதோடு தற்பொழுதும் சன்டிவியில் ஓர் முக்கிய சீரியலில் நடித்து வருகின்றார்.திருமணத்திற்கு பின்னர், தங்களின் திருமண புகைப்படங்களை இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை நடிகை மகாலட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

 அதன் கேப்ஷனில், "நீங்கள் என் இதயத்தை திருடி விட்டீர்கள். ஆனால், அதை நீங்களே வைத்திருக்க அனுமதிக்கிறேன்" என குறிப்பிடடிருந்தார்.இதன் பின்னர், மனைவியின் கேப்ஷனுக்கு பதிலளித்த ரவீந்தர், அதன் கமெண்ட்டில், "நீ அதை மறந்து விட்டாய் என நான் நினைத்தேன். நான் என்னுடைய இதயத்தை பதிலாக வைத்துள்ளேன். அதன் வேகத்தை சரி பார்த்துக் கொள் பொண்டாட்டி" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.





Advertisement

Advertisement