• Sep 20 2024

ரோப் கயிற்றில் நடிகை ஜோதிகா எப்படி தொங்கியிருக்கார் என்று பாருங்க-ட்ரிப் புகைப்படங்களை வெளியிட்ட சூர்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா. இவர்கள் இருவரும் நிஜத்தில் மட்டுமல்லாது சினிமாவிலும் "பூவெல்லாம் கேட்டு பார், உயிரிலே கலந்து, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல்" போன்ற பல படங்களில் இணைந்து நடித்திருக்கின்றார்கள்.

இவர்கள் "காக்க காக்க" என்ற பட காலத்திருந்து காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் இருவரும் திருமணமும் செய்திருக்கின்றார்கள். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும்,மகளும் உள்ளனர்.

இவரின் மகள் தியா 10-ஆம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அந்த ரிசல்ட் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வந்திருந்தது. இந்த சந்தோஷத்தைக் கொண்டாடும் விதமாக நடிகர் சூர்யா குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். இசச்சுற்றுலா புகைப்படங்கள் பலவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இச் சுற்றுலாவில் ரோப் கார் போல வெறும் ரோப் கயிற்றில் தொங்கியபடி நடிகை ஜோதிகா செய்துள்ள சாகச புகைப்படங்களும் தற்போது வெளியாகி உள்ளன. மேலும் சூர்யா-ஜோதிகா இருவரும் தமது மகன் மற்றும் மகளுடன் இணைந்து ரப்பர் படகுகளை ஓட்டியும் தங்களது சுற்றுலாப் பயணத்தில் ஜாலியாக இருந்துள்ளனர்.

திரைப்பிரபலங்களில் பலரும் தாம் குடும்பத்தினருடன் செல்லும் சுற்றுலா புகைப்படங்களை வெளியிடுவது குறைவு. ஆனால் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தங்களது கோஸ்டா ரிகா ட்ரிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement