சமீப காலமாக சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் குழந்தை நட்சத்திரங்கள் நடித்து வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வாறு டாடா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபல்யமானவர் தான் இலன்.
இவர் கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தில் ஆதித்யா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். இவர் பிரபல காமெடி நடிகர் அர்ஜுனனின் மகன் ஆவார்.
அத்தோடு இரட்டைப்பிறவியான இவருடன் இயல் என்ற என்ற சகோதரியும் கூடப்பிறந்தார். மேலும் இயல் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!