கன்னடத்தில் 2016-ஆம் ஆண்டு வெளி வந்த 'கிரிக் பார்ட்டி' என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இருப்பினும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த 'கீதா கோவிந்தம்' என்ற படம் இவரை ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் கொண்டு சேர்த்தது.
கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடிப்பதற்கு முன்னர் 'கிரிக் பார்ட்டி' பட ஹீரோ ரக்ஷித் ஷெட்டியைத் தான் காதலித்து வந்தார் ராஷ்மிகா. ஒருகட்டத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயம் கூட நடக்கவிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து ராஷ்மிகா விஜய் தேவர்கொண்டாவுடன் நெருக்கமானார். மேலும் இவர் அடிக்கடி விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் செய்யும் போட்டோஸும் வீடியோவும் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தன.
இந்நிலையில், தற்போது ராஷ்மிகா தனது வீட்டின் படுக்கையறையில் உள்ள மெத்தையில் சகட்டுமேனிக்கு படுத்து புரள்கிற வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். அப்போது அதே மெத்தையில் ராஷ்மிகாவுடன் இணைந்து அவரின் வளர்ப்பு நாயும் அவர் மேல் பாய்ந்து விழுந்து கட்டிப்பிடித்து புரள்கிறது. காதலர் தினம் அதுவுமாக வளர்ப்பு நாயுடன் ராஷ்மிகா செல்லமாக சேட்டை செய்யும் இந்த வீடியோ ஆனது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
மேலும் அந்த வீடியோவைப் பதிவு செய்த ராஷ்மிகா அதனுடன் இணைத்து காதலர் தின வாழ்த்தும் கூறியுள்ளார். அதாவது "உங்களுக்கு எங்களின் காதலர் தின வாழ்த்துகள்" என க்யூட்டாக கேப்ஷன் போட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த வருடம் விஜய் தேவரகொண்டாவுடன் காதலர் தினம் கொண்டாடவில்லையா என கிண்டலாக கேட்டு வருகின்றனர்.
Listen News!