• Sep 20 2024

ரஞ்சிதமே பாடலுக்கு வேற லெவலில் டான்ஸ் ஆடிய செஃப் தாமு- ட்ரெண்டாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் மனம் கவர்ந்த ஷோவான குக் வித் கோமாளி, இதுவரை மூன்று சீசன்கள் முடிந்து, தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

10 போட்டியாளர்களுடன் ஆரவாரமாக தொடங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இந்த சீசனில் தற்போது விசித்ரா, மைம் கோபி, சிருஷ்டி டாங்கே, கிரண் மற்றும் சிவாங்கி ஆகியோர் டாப் 5 போட்டியாளர்களாக தேர்வாகினர்.


இதில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. இந்த ரியாலிட்ரி ஷோவில் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கட் ஆகியோர் இருக்கின்றனர். இவர்கள் கோமாளிகளுடன் செய்யும் சேட்டைகள் ரசிகர்களைக் கவர்வதும் உண்டு.

இந்த நிலையில் செப் தாமு விஜய்யின் வாரிசு படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே பாடலுக்கு சூப்பராக டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.





Advertisement

Advertisement