• Sep 20 2024

முக்கிய பிரபலத்தை திடீரென சந்தித்த குக்வித் கோமாளி செஃப் வெங்கஷேட் பட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல்ய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. இந்த நிகழ்சியில் இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது.

காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பப்படுவதால் ரி ஆர் பியிலும் முன்னணியில் இந்த ஷோ காணப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய பலரும் வெள்ளித்திரையில் வாய்ப்புப் பெற்று நடித்து வருவதும் முக்கியமாகும்.

இந்த ஷோவின் நடுவர்களாக செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். 3 சீசன்களிலும் நடுவர்களாக வலம் வரும் இவர்களும் இந்த நிகழ்ச்சியில் செய்யும் சேட்டைகள் ஏராளம் எனலாம்.

அதிலும் வெங்கடேஷ் பட் மோட்டிஷேசன் கலந்த அட்வைஸ்ட் எல்லாம் கோமாளிகளுக்கு சொல்லி வருவார்.இவரின் இந்த அறிவுரைக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. இந்த நிலையில் வெங்கடேஷ் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த சந்திப்பு எப்போது நடந்தது என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் ரசிகர்கள் செஃப் வெங்கடேஷ் பட்டிற்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சின்னத்திரை பிரபலங்களான நிஷா மற்றும் கணேஷின் மகளைப் பார்த்திருக்கின்றீர்களா?- இவ்வளது பெரிதாக வளர்ந்து விட்டாரா?

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement