தமிழ் தொலைகாட்சிகளில் மக்கள் அதிகம் செலவிடும் நிகழ்சிகளை காலம் கடந்தாலும் மறக்காமல் அந்த நிகழ்ச்சியுடன் தங்ககளை நெருக்கமாக வைத்து கொள்வார்கள். அதன்படி மக்கள் மனதை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான ‘இதயம் தொட்ட சமையல்’. பிரபல சமையல் கலை நிபுணர் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியை வழங்கி வந்தார்.
மதிய நேரத்தில் ஒளிபரப்பானாலும் மக்கள் அதிகம் பார்த்த நிகழ்ச்சியாகவும் பிரபலமான சமையல் நிகழ்ச்சியாகவும் இன்றுவரை இருந்து வருகிறது. காரணம் நிகழ்சியை வழங்கிய வெங்கடேஷ் பட் எளிமையான வித்தியாசமான சமையலுடன் விதவிதமான சமையல் குறிப்புகளை மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்கப்ட்டது.
அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் விஜய் தொலைக்காட்சிதயாரித்த ‘சமையல் சமையல்’ நிகழ்ச்சியில் பங்கெடுத்தார். இந்த நிகழ்ச்சியும் மீகப்பெரிய அளவு வரவேற்பை பெற்றது. தற்போது வெங்கடேஷ் பட் விஜய் தொலைக்காட்சியின் மெகா ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.
மூன்று சீசன்களை கடந்த குக் வித் கோமாளி வெற்றிகரமாக ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் அவர்களின் ஈடுபாடு ரசிகர்களை அதிகமாக கவர்ந்து அவரது ரசிகர் வட்டத்தை மேலும் விரிவடைய செய்துள்ளது. மேலும் அதே நேரத்தில் வெங்கடேஷ் பட் இணையத்தில் இதயம் தொட்ட சமையல் என்ற சேனலை நடத்தி வருகிறார். 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சிறப்பான பக்கமாக மக்களிடம் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. மக்களிடம் அதிகம் வரவேர்க்கப் பட்ட சேனலாகவும் தற்போது இருந்து வருகிறது.
இந்நிலையில் சமையல் கலை நிபுணர் வெங்கடேஷ் பட் தனது முகநூல் பக்கத்தில் தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த இன்ப செய்தியை தனது ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டவை, “51 வருடங்கள் கடந்து விட்டது.. கற்றுக்கொண்ட பாடங்கள், கடந்து வந்த பாடங்கள், நிறைய நினைவுகள் சில இனிமையானவை சில கசப்பானவை.. இவையெல்லாம் என்னைப் பற்றிய கண்ணோட்டத்தை எப்போதும் மேம்படுத்துகிறது. எல்லா அழகான பாடங்களில், நான் எப்போதும் போற்ற விரும்பும் சிறந்ததைக் கற்றுக்கொள்ள கடவுள் எனக்கு அனுமதித்துள்ளார்."என்னைச் சுற்றியுள்ள எண்ணற்ற நன்மைகளையும் நேர்மறைகளையும் தேடி அதன் அழகை அனுபவிப்பது".
விஜய் டிவியில் இதயம் தொட்ட சமையல் அதனுடனான எனது பயணம் 24 வருடங்கள் கடந்தும் சமூக வலைதளத்தில் என்னை அனைவரிடமும் நெருக்கமாக வைத்துக் கொள்ள உதவியது.நான் எனக்கு தெரிந்தவற்றை எப்போதும் உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். மக்களிடம் மதிப்நு பெற என்னால் முடிந்ததை இதுவரை செய்து வந்துள்ளேன்.நேரம் மட்டும் தான் ஒரு நபரால் கொடுக்க கூடிய சிறந்த விஷயம், அது மீண்டும் திரும்ப வரவே வராது. உங்களது சிறந்த நேரத்தை எனக்காக செலவிட விரும்புகிறேன்.. ஆம், வரும் ஏப்ரல் 14 அன்று எனது யூடியூப் சேனலில் 'இதயம் போன போக்கிலே' என்ற நிகழ்ச்சியை தொடங்கவுள்ளேன்..
இந்த நிகழ்ச்சி என் அழகாற நினைவுகளை பகிரும் நிகழ்வாக இருக்கும்.. என் பள்ளி, எனக்கு பிடித்த வாழ்க்கை பாடங்கள், என் வாழ்க்கை பாடங்கள், நான் வழக்கமாக செல்லும் கோவில்கள், எனக்கு நெருக்கமான பல விஷயங்கள் மற்றும் நான் இருக்கும் இடம் மற்றும் சிறு சிறு குறிப்புகள் குறித்து பேசும் நிகழ்ச்சியாக இருக்கும். நிச்சயமாத அது உங்களுக்கு மகிழ்ச்சியையும் புன்னகையையும் தரக்கூடியதாக இருக்கும். இந்த சமூகத்தில் என்னால் முடிந்த மகிழ்ச்சி, அமைதி, அன்பு மற்றும் சிரிப்பு ஆகியவற்றை கொடுக்க நான் எடுக்கும் முயற்சியாகும்.. ஏப்ரல் 14 எனது நன்றியை உங்களுக்கு தெரிவிக்கும் நாள்.. அங்கு சந்திப்போம்..
வெங்கடேஷ் பட் - இதயம் போன போக்கிலே.... ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11 மணிக்கு.” என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவரது பதிவை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!