• Sep 20 2024

தலைவரின் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு- மாஸாக வெளியாகிய டீசர்

stella / 1 year ago

Advertisement

Listen News!


ரஜினி, நெல்சன் உடன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். 

மேலும் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் என பான் இந்தியா அளவில் புகழ்பெற்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். 

ஜெயிலர் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது.இதையடுத்து பின்னணி பணிகளை மேற்கொள்ள உள்ளனர். 

இந்த நிலையில் ஜெயிலர் படமானது ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது குறித்த டீசர் வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement