நேற்றைய தினம் உலகெங்கிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு சாதாரண மக்கள் மட்டுமன்றி திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பெண்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி இருந்தனர்.
அந்த வரிசையில் பாடலாசிரியர் வைரமுத்துவும் கவிதை ஒன்றின் மூலமாக தனது மகளிர் தின வாழ்த்துக்களை கூறியதோடு அதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருக்கின்றார்.
அதாவது அந்தப் பதிவில்,
“மாலையும் நகையும்
கேட்கவில்லை பெண்;
மதித்தல் கேட்கிறாள்.
வீடும் வாசலும்
விரும்பவில்லை பெண்;
கல்வி கேட்கிறாள்.
ஆடம்பரம் அங்கீகாரம்
ஆசைப்படவில்லை பெண்;
நம்பிக்கை கேட்கிறாள்.
கொடுத்துப் பாருங்கள்;
அவளே பாதுகாப்பாள்
ஆண்களையும்.
உலக மகளிர் திருநாள் வாழ்த்து” என குறிப்பிட்டு இருந்தார்.
வைரமுத்துவின் இந்த வாழ்த்துக் கவிதையைப் பார்த்து டென்ஷன் ஆன பாடகி சின்மயி, கவிதை நடையிலேயே அவருக்கு பதிலடி கொடுத்து தானும் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில் அவர் “அவ்வீட்டு வாசலை தாண்டும் பொழுது காம வெறியர்களை கேட்கவில்லை பெண்; பாதுகாப்பு கேட்கிறாள். பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூறு கேட்கவில்லை பெண்; நியாயம் கேட்கிறாள். இவர் எப்படி பெண்களின் பாதுகாப்பு குறித்தும் சுதந்திரம் குறித்தும் பேசுகிறார். என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என சின்மயி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் இருவரது பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.
Listen News!