லியோ படத்தில் அதிக பிரபலங்கள் நடித்து இருக்கின்றார்கள். இந்த சூழலில் பாடகி சின்மயி த்ரிஷாவுக்கு குரல் கொடுத்திருக்கின்றார். ஆனால் டப்பிங் யூனியன் சில காலம் சின்மயி படங்களில் டப்பிங் பேசக்கூடாது என தடை விதித்துள்ளது. அதையும் மீறி லோகேஷ் லியோ படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கின்றார். இதற்கான காரணத்தை பற்றி சமீபத்தில் கூறி இருக்கின்றார்.
இதுவரை லோகேஷ் படத்தில் கதாநாயகிகள் இருக்க மாட்டார்கள். அப்படி இருந்தாலும் அதிக முக்கியத்துவம் தரமாட்டார்கள் லியோ திரைப்படத்தில் விஜய் மற்றும் த்ரிஷாவுக்கிடையில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதாக கூறியிருக்கிறார். எவர்கிரீன் ஜோடியான இவர்களின் கெமிஸ்ரி லியோ படத்தில் பக்கம் ஓர்க் அவுட் ஆகி உள்ளது. மேலும் த்ரிஷாவின் குரலுக்கு சின்மயி இந்த படத்தில் குரல் கொடுத்து இருக்கின்றார். என்னை பொறுத்த வரையில் எனக்கு வேலை ஆக வேண்டும். சின்மயிக்கு டப்பிங் பேச தடை இருப்பதை பற்றி எல்லாம் நான் காெஞ்சமும் யோசிக்கவில்லை. அதேபோல் த்ரிஷாவுக்கு சின்மயி குரல்தான் பொருந்தி இருக்கிறது. தமிழில் மட்டுமல்ல எல்லா மொழிகளிலும சின்மயிதான் குரல் கொடுத்திருக்கின்றார். என லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கின்றார்.
Listen News!