எத்தனை நகைச்சுவை நடிகர்கள் புதிது புதிதாக வந்தாலும் ஒரு சிலரை மட்டும் நம்மால் என்றுமே மறக்க முடியாது. அவ்வாறானவர்களில் ஒருவர் தான் நடிகர் சின்னி ஜெயந்த். அந்தவகையில் இவர் தமிழில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர்.
இவர் 1984-ல் வெளியான `கைக்கொடுக்கும் கை' என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள இவர் சிவாஜி கணேசனுடன் 12 படங்களிலும், ரஜினிகாந்துடன் 15 படங்களிலும் நடித்துள்ளார். அந்தவகையில் 400 படங்களுக்கு மேல் நடித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக சினிமாவில் 39 வருடங்களாக நீடிக்கும் சின்னி ஜெயந்த் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து விட்டு தற்போது மீண்டும் பிஸியாக நடிக்கத் தொடங்கி இருக்கின்றார். அதாவது நடிகர் அதர்வாவுடன் 'டிரிக்கர்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்போது விஜய்சேதுபதியுடன் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', ஜெய்யுடன் `நடிகன் பிரம் அருப்புக்கோட்டை', ஹரிஷ் கல்யாணுடன் `ஆயிரம் கோடி வானவில்', ஆர்.ஜே.பாலாஜியுடன் `சிங்கப்பூர் சலூன்', ஹிப்ஹாப் ஆதியுடன் `வீரன்', சிம்புத்தேவன் இயக்கும் `படகு' ஆகிய 7 படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!