• Nov 19 2024

சிரஞ்சீவி குடும்பத்தில் விவாகரத்து.. கணவனைப் பிரிகிறாரா பிரபல நடிகை..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி மகள் தான் நடிகை நிஹாரிகா. இவர் தமிழிலும் ஒரு சில படங்கள் நடித்திருக்கின்றார். நிஹாரிகா குண்டூர் ஐ.ஜி பிரபாகர் ராவின் மகன், சைதன்யா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் 2020 ஆம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.


இந்த திருமணத்தின் போது குறிப்பாக சிரஞ்சீவி தன்னுடைய தம்பி மகளுக்கு 2 கோடி மதிப்புள்ள நகைகளை பரிசளித்தது பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகிய நிஹாரிகா அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பதிவுகளை இட்டு வருகின்றார்.


இந்நிலையில் தான் தற்போது நடிகை நிஹாரிகா அவரின் கணவர் சைதன்யாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன் ஃபாலோ செய்துள்ளார். அதுமட்டுமல்லாது சைதன்யாவும் தன்னுடைய மனைவி நிஹாரிகாவை இன்ஸ்டா பக்கத்தில் அன் ஃபாலோ செய்துள்ளார். 


ஆகவே இவர்கள் இருவரும் பிரிய உள்ளதாக தெலுங்குத் திரையுலகில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. மேலும் கடந்த சில மாதங்களாக நிஹாரிகா - சைதன்யா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டு வந்தது. 


இதனையடுத்து தற்போது இவர்கள் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இது குறித்து எவ்வித அதிகார பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement