• Nov 17 2024

நடிகர் சிரஞ்சீவிக்கு அறுவைச் சிகிச்சை... அட பாவமே இவருக்கு இப்படி ஒரு சோகமா. .. கவலையில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் என்ற பெயரோடு கொடிக்கட்டி பறந்து வருபவர் சிரஞ்சீவி. இவர் நடிகர் மட்டுமல்லாது தெலுங்கில் பிரபல அரசியல் வாதியாகவும் திகழ்ந்து வருகின்றார். இவர் நடிப்பில் இதுவரையில் ஏறக்குறைய 150 இற்கும் அதிகமான திரைப்படங்கள் உருவாகியுள்ளன.


மேலும் இவர் நடிப்பில் 'போலோ சங்கர்' படம் சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து அதிரடி படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இவருக்கு ஏற்கனவே 2016-ஆம் ஆண்டில் வலது மற்றும் இடது தோள்பட்டைகளில் அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது.

இதனையடுத்து நடிகர் சிரஞ்சீவி நீண்ட நாட்களாகவே முழங்கால் வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த முழங்கால் வலிக்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு டாக்டர்கள் பலரும் அறிவுரை வழங்கி இருந்தனர்.


ஆனால் சிரஞ்சீவியோ படப்பிடிப்பு காரணமாக குறித்த சிகிச்சையை தள்ளிப்போட்டு வந்தார். தற்போது அப்படமும் வெற்றிகரமாக வெளியாகி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு இவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. மேலும் ஒரு வாரம் மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார் எனவும் கூறப்படுகின்றது. அதற்குப் பின்னர் தான் ஐதராபாத் மீண்டும் திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றது.


இவ்வாறாக அறுவைச் சிகிச்சை செய்துள்ள சிரஞ்சீவி 2 அல்லது 3 மாத ஓய்வுக்கு பிறகு தான் புதிய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எது எவ்வாறாயினும் சிரஞ்சீவி முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்துள்ளமை ரசிகர்கள் பலருக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

Advertisement

Advertisement