• Nov 14 2024

நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் குறித்து சியான் விக்ரம் உருக்கமான பதிவு!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையில் நடிகர் அஜித் குமார் இல்லத்தில்  காலமானார். 

அவருடைய மறைவுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலா, விஜயபாஸ்கர், விஜய் வசந்த், நடிகர் ஜி எம் சுந்தர், நடிகை சாக்ஷி அகர்வால், நடிகர் சிவா ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர்.  அஜித்குமார் தந்தையார் பி.எஸ்.மணியின் இறுதி சடங்கு பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்றது. 

இறுதிச் சடங்கில் நடிகர் அஜித் குமார், நடிகை ஷாலினி அஜித்குமார், நடிகர் ரிச்சர்ட் ரிஷி, நடிகர் சிவா உள்ளிட்ட அஜித்குமாரின் உறவினர்கள் கலந்து கொண்டனர். 

  இந்நிலையில் நடிகர் விக்ரம் தமது டிவிட்டர் பக்கத்தில், "அஜித், அவரது தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவருடைய அப்பாவின் இழப்பு.. குறிப்பாக சுப்ரமணியம் அங்கிளைப் போல அக்கறையுடனும் இனிமையாகவும் இருக்கும் ஒருவரை ஈடுகட்ட முடியாது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். உறுதியாக இருங்கள் அஜித்." என ட்வீட் செய்து இரங்கல் தெரிவித்துள்ளார்.



Advertisement

Advertisement