உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 3-இல் வெளிவந்த திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், போன்ற முன்னணி நட்சத்திரங்களும் கௌரவ வேடத்தில் நடிகர் சூர்யாவும் நடித்திருந்தார்.
இப்படம் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக வெளியானது இந்நிலையில் விக்ரம் திரைப்படம் தெலுங்கில் விக்ரம் ஹிட் லிஸ்ட் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜூன் 3-இல் வெளியானது.
திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்னரே அதனுடைய பாடல்கள் டீஸர் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. திரைப்படம் வெளியாகி 10 நாட்களில் உலகளவில் 250 கோடிக்கு மேல் வசூலித்து உள்ள நிலையில் இத்திரைப்படம் தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.
இதையடுத்து படக்குழுவினர் கலந்து கொண்ட வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் விக்ரம் திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய மாஸ் ஹிட் கொடுத்துள்ளது.பலரும் படத்தை பல முறை பார்த்துள்ளதாக செல்கிறார்கள்.
சினிமாவுக்கு மொழி பேதம் கிடையாது நான் ஒரு நடிகராக இருந்து ஸ்டாராக மாறுவதற்கு தெலுங்கு சினிமா எனக்கு உதவி செய்துள்ளது.நான் நடித்த தெலுங்கு படமான "மரோசரித்ரா" எந்த சப்டைட்டில் இல்லாமலேயே இரண்டரை வருடம் ஓடியது தொடர்ந்து விக்ரம் படத்துக்கு நீங்கள் தந்திருக்கும் ஆதரவை தொடர்ந்து தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பிற செய்திகள்
- இல்லாத என்ன பற்றி பேச நீங்க யாரு-தன்னை விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த ஷிவாங்கி
- சின்ன பசங்களோட சேர்ந்து மசாலா படம் பண்ணியிருக்கிறாங்க-விக்ரம் படத்தை கழுவி ஊற்றிய புஃளூ சட்டை மாறன்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!