• Sep 23 2024

சினிமா தொழிலாளர்கள் திடீர் போராட்டம்….நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அரசியலில் மட்டுமன்றி சினிமாவிலும் பல்வேறுபட்ட போராட்டங்கள் இடம் பெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. இந்நிலையில் தெலுங்கு திரைப்படத் தொழிலார்கள் நேற்று போராட்டம் ஒன்றினை திடீரென்று முன்னெடுத்திருந்தனர்.

அதாவது சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இதன் காரணமாக சுமார் 25-இற்கும் மேற்பட்ட சினிமா படப்பிடிப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதாவது தெலுங்கு திரைப்படத் தொழிலாளர் சங்கத்தினர் சினிமா டிக்கெட்டின் விலை உயர்வு, நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பள உயர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து தங்களுக்கும் சுமார் 45 சதவிகிதம் வரை சம்பளத்தினை உயர்த்த வேண்டும் எனத் தயாரிப்பாளர்களை வலியுறுத்தி தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வந்திருந்தனர்.

தயாரிப்பாளர் சங்கங்களோ சினிமா தொழிலார்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் அலட்சியப் படுத்தி வருகின்றன. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று ஹைதராபாத் கிருஷ்ணா நகரில் உள்ள பிலிம்ஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அலுவலகத்திற்கு முன்பாக திடீரென்று போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.

இதன் காரணமாக அங்கு வந்த போலீசார் அவர்களுடனும் தயாரிப்பாளர்களுடனும் பேசி தயாரிப்பாளர் சங்கங்களை பேச்சு வார்த்தை நடாத்துமாறு கூறியிருந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெறவிருந்த சுமார் 25-இற்கும் மேற்பட்ட சினிமா தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement