இன்றைய தினம் நடிகர் அர்ஜுன் தன்னுடைய 61-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றார். இதனால் இவர் நடித்துள்ள லியோ படத்தில் இவருடைய கதாப்பாத்திரமான ஹரோல்ட் தாஸ் கேரக்டரின் கிளிம்ஸி வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக விஜய் நடித்துள்ளார்.இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் வில்லனாக, சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜுன், ஆகியோர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை தவிர யோகி பாபு, கதிர், பிரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி, மடோனா செபஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் இந்த கிளிம்ஸ் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அர்ஜுன் மிரட்டல் வில்லனாக நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தெறிக்க என்கிற ஒரே.. ஒரு வார்த்தை மட்டுமே அர்ஜுன் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!