தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் இதுவரையில் பாம்பு, குரங்கு, நாய், மாடு, பன்றி போன்ற பல விலங்குகள் நடித்து திரைப்படங்கள் வெளியாகின. அதன் பிறகு விலங்குகளை மட்டுமே மையமாக வைத்து சில படங்கள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு 'கிளவர்' என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ளதாக சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
மதுரையை சுற்றியுள்ள கிராமம் ஒன்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு, வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் முத்து முனியசாமி பாடல் தொகுப்பு செய்ய, ரகுநாத் இசையமைத்துள்ளார். இவர்களுடன் தீபக் கார்த்திகேயன், சஞ்சய் கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்துள்ளார்கள்.
இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் என்பவற்றை செந்தில் குமார் சுப்பிரமணியம் இயக்கியுள்ளார். இந்த படம் பற்றி இவர் கூறுகையில்,
உலகத் திரைப்பட வரலாற்றிலேயே முதன்முறையாக இரண்டு நாய்களை மட்டுமே நடிக்க வைத்து இந்த படத்தை எடுத்துள்ளேன். அம்மா நாயிடம் இருந்த குட்டி நாயை ஒரு சைக்கோ திருடி செல்கிறார். இதை தொடர்ந்து தனது குட்டியை மீட்க அம்மா நாய் எப்படி பாடுபடுகிறது? எப்படி அதை காப்பாற்றுகிறது என்பதை தான் கதைக்களமாக்கி உள்ளேன்.
இந்த படம் விறுவிறுப்பான திகிலும், திரில்லும் கலந்து படத்தை டைரக்ட் பண்ணி உள்ளேன். மக்கள் பார்த்து ரசிக்கும் படி இருக்கும். கிளவர் என பெயரிடப்பட்ட இந்த படம், அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
Listen News!