• Sep 20 2024

விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படம்… எப்போது ரிலீஸ் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தன் அசாத்திய நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த நடிகர் விக்ரம். ஆரம்பகாலகட்டத்தில் பல போராட்டங்களை சந்தித்து இன்று முக்கிய நடச்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கின்றார் விக்ரம். டப்பிங் கலைஞராக இருந்து பின்னர் நடிகராக உயர்ந்து இன்று தன் கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராக உருவெடுத்துள்ளார் விக்ரம்.

சேது படத்தின் மூலம் திருப்புமுனையை கண்ட விக்ரம் தொடர்ந்து தில், தூள், சாமி, அந்நியன், தெய்வத்திருமகள், ஐ போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

அத்தோடு கடைசியாக இவரும் இவர் மகன் துருவும் நடித்த மகான் திரைப்படம் OTT யில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியதோடு இதில் பல கெட்டப்பில் விக்ரம் நடித்துள்ளார்.

இதன்பின் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளிவந்த அதிரா படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட கோப்ரா திரைப்படம் மீண்டும் தள்ளிப்போய் உள்ளது.

ஆம், வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி தான், கோப்ரா படம் வெளியாகும் என்று ரசிகர்களுக்கு வருத்தமளிக்கும் வகையில் தகவல் வெளியாகியுள்ளது.

https://www.youtube.com/embed/XNvSpgoJYqg

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement