• Nov 19 2024

கோப்ரா டிரைலரால் கொந்தளிக்கும் ரசிகர்கள்-நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. நீண்ட நாட்களாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த அந்த பிரம்மாண்ட படம் தற்போது ரிலீசிற்கு தயாராக உள்ளது.

கோப்ரா படம் ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அத்தோடு டிமின்டிரி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞான முத்து அதே பாணியில் த்ரில்லர், ஆக்ஷன் கலந்த படமாக கோப்ரா படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் விக்ரம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.மேலும்  கோப்ரா டூர் பட்டியல் தென்னிந்தியா முழுவதும் உள்ள விக்ரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகத்தில் வெளியிட உள்ளது.

கோப்ரா ரிலீசிற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் படத்தின் பிரம்மாண்ட டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. அத்தோடு தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் கோப்ரா படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஆனால் தமிழ் தவிர மற்ற மொழிகளில் எந்த அப்டேட்டையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை. படத்தின் டிரைலரும் தமிழ் தவிர மற்ற மொழிகளில் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதனால் ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள விக்ரம் ரசிகர்கள் செம அப்செட் ஆகி உள்ளனர். தங்கள் மொழியில் கோப்ரா டிரைலரை பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். முதலில் தமிழில் வெளியிட்டு விட்டு, பிறகு மற்ற மொழிகளில் வெளியிடுவார்களென காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

இதனால் மற்ற மொழிகளில் எவ்வாறு இவர்கள் விளம்பரம் செய்ய முடியும்.மேலும் இப் படம் 3 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். ஆனால் தமிழை தவிர மற்ற எந்த மொழியிலும் படம் பற்றிய எதையும் வெளியிடவில்லை. டிரைலரில் ஒரு சப் டைட்டில் கூட போடவில்லை. இதனால் தமிழை தவிர மற்ற 2 மொழிகளிலும் கோப்ரா படம் நிச்சயம் என ஃபிளாப் ஆவது உறுதி என ரசிகர்கள் கொந்தளிப்புடன் சோஷியல் மீடியாவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

விக்ரம் 20 கெட்அப்களில் நடித்துள்ள கோப்ரா படம் 90 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.அத்தோடு விக்ரம் கடந்த சில நாட்களாக கோப்ரா படத்தின் ப்ரொமோஷனுக்காக பல ஊர்களுக்கும் டூர் சென்று வருகிறார். மதுரை, திருச்சி, சென்னையை தொடர்ந்து இன்று கொச்சியில் ப்ரொமோஷன் செய்து வருகிறார். இதைத் தொடர்ந்து பெங்ளூரு, ஐதராபாத் நகரங்களுக்கும் அவர் செல்ல உள்ளார்.

கோப்ரா ரிலீஸ் ஆனதும், அடுத்த படமான பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் விக்ரம் ஈடுபட உள்ளார்.எனினும் இந்திய சினிமாவே அதிகம் எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது.


Advertisement

Advertisement