• Sep 20 2024

‘காஃபி வித் காதல்’-இயக்குநர் சுந்தர். சியின் புதிய படத்தின் டைட்டில் அறிவிச்சாச்சு- கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் சுந்தர். சி. இவர் இயக்கத்தில் வெளியான வின்னர் ,கலகலப்பு, அரண்மனை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிகளவான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில் இவர் இயக்கத்தில் தற்பொழுது ஒரு புதிய படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூவரும் கதாநாயகன்களாக நடித்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஜோடியாக அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் டிவியின் தொகுப்பாளினி டிடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அத்தோடு யோகிபாபு உள்ளிட்ட காமெடி பட்டாளமே நடிக்கிறது.

இப்படத்தினை குஷ்பூவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிப்பதோடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஊட்டியில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘காஃபி வித் காதல்’ தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த வித்தியாசமான தலைப்பை பார்த்தாலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருவதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement