• Sep 21 2024

காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தின் வசூல் விபரம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநர் தான் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகிய திரைப்படம் தான் காத்துவாக்கில ரெண்டு காதல் திரைப்படம்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, நயந்தாரா, சமந்தா மூவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

முக்கோண காதல் கதையை மையப்படுத்தி இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும், வசூல் ரீதியாக மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

விஜய் சேதுபதி திரைப்பயணத்திலே அதிகம் வசூல் செய்த படமாக காத்துவாக்குல இரண்டு காதல் அமைந்துள்ளது.

ஆம், தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 36 கோடி வசூலை கடந்துள்ளது.உலகம் முழுவதும் ரூ 56 கோடிகள் வரை இப்படம் வசூல் செய்துள்ளதாம். கண்டிப்பாக தமிழகத்தில் ரூ 40 கோடி வசூலை இப்படம் எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

https://www.youtube.com/embed/3mI2KccPi4w

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement