• Sep 21 2024

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்- அடடே இந்த சீரியல் இப்போது தானே ஆரம்பித்தது?

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான ஷு தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் என்னும் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ரேஷ்மா. 

இவருக்கு இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை அடுத்து ஷு தமிழ் தொலைக்காட்சியிலேயே பூவே பூச் சூடவா என்னும் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த சீரியல் மூலம் பிரபல்யமான இவர் இந்த சீரியலில் நடித்து வந்த நடிகர் மதனைக் காதலித்து வந்தார்.


சில வருடங்கள் காதலர்களாக இருந்த இவர்கள் அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.திருமணத்தின் பின்னர் இருவரும் அபி ரெய்லர் என்னும் சீரியலில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்து வருகின்றனர்.

அது தவிர மிஸ்டர் அன்ட் மிஸ் இஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கணவன் மனைவியாக பங்குபற்றி வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் நடித்து வரும் அபி ரெய்லர் சீரியல் முடிவுக்கு வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement