• Sep 20 2024

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் பெயர் என்ன தெரியுமா?-இந்த படம் ஸ்போர்ட்ஸ் ஜானராக இருக்குமாம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தெரிந்து எடுத்து நடிப்பதால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த நிலையில் இவரது நடிப்பில் தற்பொழுது கோப்ரா என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தை கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என சொல்லபடுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்புப் பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

படத்துக்கு மைதானம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தலைப்பை வைத்து இந்த திரைப்படம் ஸ்போர்ட்ஸ் ஜானராக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/9JOK7RzxYes

Advertisement

Advertisement