கடந்த 2012 இல் நடிகர் தினேஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அட்டகத்தி. இப்படத்தை இயக்கியவர்தான் இயக்குநர் பா.ரஞ்சித். இவர் ஆரம்பத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவிப்பணியாளராக பணியாற்றினார்.
இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்திக் நடிப்பில் மெட்ராஸ் படத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த் நடிப்பில் கபாலி, பரியேறும் பெருமாள், காலா, சார்பட்டா பரம்பரை போன்ற வெற்றிப்படங்களை திரையுலகிற்கு கொடுத்தார்.
மேலும் நோர்வே தமிழ்த் திரைப்பட விழா விருதுகள், தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்போன்றவற்றை பெற்று முன்னணி இயக்குநராக வலம்வருகின்றார்.
பா.ரஞ்சித் மற்றும் தினேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ஜெ. பேபி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.பா.ரஞ்சித்தின் நீலம் பிரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெ. பேபி’.
மேலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த சுரேஷ் மாரி இப்படத்தை இயக்கியுள்ளார். அட்டகத்தி தினேஷ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
தினேஷுன் இணைந்து ஊர்வசி மற்றும் மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
டோனி பிரிட்டோ இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஒரு தாய் மற்றும் இருமகன்களை வைத்து உருவாகி வரும் கதை என்றும், இதில் சென்டிமென்ட் மற்றும் காமெடி கலாட்டா இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
எனினும் தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊர்வசியின் யதார்த்த நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிற செய்திகள்:
- தமிழ் பிக்பாஸ் டைட்டிலை மிஸ் செய்து தெலுங்கு Non Stop டைட்டிலை தட்டிச்சென்ற பிரபல நடிகை-குவியும் வாழ்த்துக்கள்..!
- திடீரென மும்பைக்கு பறந்த அடித்த சூர்யா மற்றும் ஜோதிகா
- “மனைவிக்கு மட்டும் தான் தெரியும்” – உண்மைகளை கூறிய சிவகார்த்திகேயன்…!
- அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வருத்தும் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!