தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவரும் விதமாக சூப்பர் ஹிட் படங்களை இயக்கக் கூடிய இயக்குநர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் ப்ளாக் பஸ்டர் ஹிட் பெறும் அளவுக்கு திரைப்படங்களை எடுக்கக் கூடிய இயக்குநராக வலம் வருபவர் தான் பா.ரஞ்சித்.
இவருடைய இயக்கத்தில் இறுதியாக சார்பாட்டா பரம்பரை என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தாலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது
இயக்குநர் பா. ரஞ்சித் நீலம் புரடொக்சன் நிறுவனத்தின் சார்பில் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சுரேஷ் குமார் இயக்கத்தில், தோனி பிரிட்டோ இசையில், மாதவன் ஒளிப்பதிவில், சண்முகம் வேலுச்சாமி படத்தொகுப்பில், உருவாகி வரும் திரைப்படம் ஜே பேபி
மேலும் இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், ஊர்வசி, டிக்கிலோனா மாறன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் என்பதும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் வைரலாகியது.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பா. ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
பிற செய்திகள்:
- பார்த்திபனின் நடிப்பில் உருவாகியுள்ள இரவின் நிழல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!
- பிரபல நடிகரின் படத்தை பார்த்து விட்டு கண்ணீர் விட்ட ரஜினிகாந்த் – எந்த படம் தெரியுமா..?
- தளபதி 66 படத்தில் இரண்டு கதாநாயகிகளா…வம்சியின் வேற லெவல் சம்பவம் லோடிங்..!
- நடுரோட்டில் அடித்துக் கொண்ட பிக்பாஸ் பிரபலம் மற்றும் யூடியூபர் -தீயாய் பரவும் வீடியோ..!
- அஜித்தை பற்றி பல விடயங்களை கூறிய பயில்வான் ரங்கநாதன்..!
- முதல் முறையாக விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் பிரபல நடிகை..!
- சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் தமிழகத்தில் இவ்வளவு வசூலா.. வெளியானது விபரம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!