இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிக்கும் ‘சப்தம்’ படத்தின் முதல் ஷெட்யூல் சில வாரங்களுக்கு முன்பு மூணாறில் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.
இந்நிலையில், இந்த ஷெட்யூலில் நடிகை லட்சுமி மேனன் இணைந்துள்ளார் என்று படக்குழு அறிவித்துள்ளது. தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் அறிவழகன், சப்தம் படத்தொகுப்பில் இணைந்த திறமையான மற்றும் அழகான நடிகை லட்சுமி மேனனை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் நீண்ட நாட்களுக்கு பின் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். அட ஆமாங்க… சமீபத்தில், இவர் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2009-ல் ஈரம் என்ற ஸ்லீப்பர் ஹிட் படத்தை வழங்கிய நடிகர் ஆதியும், இயக்குநர் அறிவழகனும் 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘சப்தம்’ என்ற திகில் படத்திற்காக இணைந்துள்ளனர்.
இப்படம் தமிழில் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. சுவாரஸ்யமாக, இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!