• Sep 20 2024

நகைச்சுவை நடிகர் மருத்துவமனையில் அனுமதி-நடந்தது என்ன..? சோகத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ். இவர் நகைச்சுவை மன்னன் வடிவேலுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

மேலும் இவர் 25 ஆண்டுகள் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய உள்ள தனது நடிப்பால் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

பின்னர் வைகைப்புயல் வடிவேலுக்கு சினிமாவில் நடிக்க தடை போட்டதற்கு பிறகு நடிகர் வெங்கல்ராவ் வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார்.

அதனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமா படங்களில் இவரை பார்க்க முடியவில்லை. இதனால் வறுமையில் அனுபவித்து வருவதாக சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் வெங்கல்ராவ் சிறுநீரக கோளாறு காரணமாக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை அறிந்த இவரது ரசிகர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement