• Sep 21 2024

உடல் நலக் குறைவால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட காமெடி நடிகர் போண்டாமணி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் போண்டாமணி. இவர் இதுவரைக்கும் 175க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக வடிவேலுவுடன் பல படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் சுந்தரா ட்ராவல்ஸ், வின்னர், மருதமலை போன்ற படங்களில் வடிவேலுவுடனான அவரது காம்பினேஷன் பெரும் வரவேற்பை பெற்றது. இதேபோல் கவுண்டமணி, விவேக் போன்றவர்களுடனும் நடித்துள்ளார்

மேலும் இலங்கையில் மன்னார் என்ன இடத்தை பூர்வீகமாக கொண்ட இவர் கேதீஸ்வரன் என்ற தனது இயற்பெயரை சினிமாவுக்காக போண்டா மணி என மாற்றிக்கொண்டார். இவருடன் 16 பேர் உடன் பிறந்தனர். அவர்களில் 8 பேர் அங்கு நடைபெற்ற இனக்கலவரத்தில் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து அகதியாக ராமேஸ்வரம் வந்த அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள போண்டா மணி சென்னை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

போண்டா மணிக்கு இதயக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement