நடிகர் சந்தானத்துடன் செந்திலும் சேர்ந்து நடித்த கிக் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹுரோவாக நடித்து வருபவர் தான் சந்தானம். அந்த வகையில் இவர் கதாநாயகனாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தில்லுக்குத் துட்டு இனிமேல் இப்படி தான் சக்கை போடு ராஜா சர்வம் சுந்தரம் குளு குளு ஆகிய இன்னும் பல படங்களில் நடித்திருக்கின்றார்.
ஆனால் இவர் கதாநாயகனாக நடித்தாலும் இவரால் சரியான ஒரு அடையாளத்தை பெற முடியவில்லை. இதனால் மீண்டும் காமெடியனாகவே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இவர் நடித்து வரும் புதிய படம் தான் கிக்.
தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகி வரும் இப்படத்தை கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்குகிறார். சந்தானம் 15 என்ற தற்காலிக தலைப்போடு இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி சத்தமே இல்லாமல் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் செந்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!