• Nov 10 2024

அரசியலுக்கு வந்து தேர்தலில் நிற்பது தான் மகிழ்ச்சி- திடீர் முடிவெடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்- அப்போ இனிமேல் படம் இயக்கமாட்டாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

"அரசியல்வாதியாக ஆவேனா என தெரியவில்லை. தற்போது என்னுடைய முழு கவனமும் கலை & இலக்கியம், பண்பாடு சார்ந்தே இருக்கும். அது தான் என் இலக்கு என இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநராக இருந்து  “அட்டக்கத்தி” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான்  பா.ரஞ்சித். இப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படம் அனைவரின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார். 


இது தவிர நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”, சென்ற ஆண்டு கிறிஸ்துமசை முன்னிட்டு வெளியான 'ரைட்டர்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

பின்பு ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை' பரம்பரை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து. இவரது இயக்கத்தில் இறுதியாக “நட்சத்திரம் நகர்கிறது” படம் வெளியாகியது. இதில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்தனர்.


இந்த நிலையில் அண்மையில் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அந்நிகழ்வில் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக பெரியார் & அம்பேத்கர் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். மேலும் "அரசியல்வாதியா பார்க்கலாமா?" என்ற கேள்விக்கு, "அரசியல்வாதியாக ஆவேனா என தெரியவில்லை. தற்போது என்னுடைய முழு கவனமும் கலை & இலக்கியம், பண்பாடு சார்ந்தே இருக்கும். அது தான் என் இலக்கு. 

அரசியலுக்கு வந்து தேர்தலில் நிற்பது பிரச்சினை இல்லை. அதையும் மகிழ்ச்சியாக எடுத்து கொள்வேன். இப்போ அரசியல் தேவையில்லை என்று நினைக்கிறேன்." என பா. ரஞ்சித் பதில் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement