• Sep 20 2024

புதிய அப்டேட்டை வெளியிட்ட தளபதி 66 படக்குழு- ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். இவர் தற்பொழுது தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருகின்றார்.

இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். இவருடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார் ,குஷ்பு ,ஷாம் என பல நட்சத்திரப் பட்டாளங்களே இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பபாக நடந்த வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் குறித்தும் அடிக்கடி தகவல் வெளியாகிக் கொண்டே இருக்கின்றது. மேலும் தளபதியின் பிறந்த நாள் இந்த மாதம் 22ம் திகதி வர இருப்பதால் ரசிகர்கள் பலவிதமான டிபி வெளியிட்டு வாழ்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற 21ம் திகதி தளபதி 66 படத்தின் பெஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement